புர்கா தடை விவகாரம் குறித்து நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.

 புர்கா தடை விவகாரம் குறித்து நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.


புர்கா தடை தொடர்பில் பல்­வேறு கருத்துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற போதிலும் அது­வி­ட­யத்தில் அவ­ச­ரப்­படத் தேவையில் எனத் தெரி­வித்­துள்ள நீதியமைச்சர் அலி சப்ரி, அமைச்சரவையில் உள்ள சக­ல­ரி­னதும் கருத்­துக்­களைப் பெற்று நாட்­டுக்கு உகந்த தீர்­மானம் ஒன்று எட்­டப்­படும் என்றும் தெரி­வித்தார்.

இது குறித்து ஊட­கங்கள் எழுப்­பிய கேள்வி­க­ளுக்கு பதி­ல­ளித்த அவர் மேலும் தெரி­விக்­கையில், சில­ருக்கு சட்டம் தொடர்­பான சரி­யான தெளி­வில்லை. தான் அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் கையொப்­ப­மிட்­ட­தா­கவே அவர் (சரத் வீரசே­கர) கூறினார். அமைச்­ச­ர­வையில் காத்­தி­ருப்பு பட்­டியல் ஒன்­றுள்­ளது. குறிப்பிட்ட எண்­ணிக்­கை­யான அமைச்சரவைப் பத்­தி­ரங்­களே ஒரு அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்­ளப்­படும். புர்கா விட­யத்­திற்கு அவ­ச­ரப்­ப­டத்­தே­வை­யில்லை. அது வந்­ததும் அமைச்­ச­ர­வையில் உள்ள சக­ல­ரதும் அபிப்­பி­ரா­யங்­களைப் பெற்று நாட்­டுக்கு உகந்த தீர்­மானம் ஒன்று எடுக்­கப்­படும் என்றார்.

இதே­வேளை புர்கா தடை தொடர்பில் தான் நீதி­ய­மைச்சர் அலி சப்­ரி­யுடன் கலந்­து­ரை­யா­டி­ய­தா­கவும் அதற்கு அவர் எதிர்ப்புத் தெரி­விக்­க­வில்லை என்றும் பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீரசேகர சில தினங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.