வேன், முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி கோர விபத்து.

 வேன், முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி கோர விபத்து.


ஹபரணை- பொலன்னறுவை பிரதான வீதியின் கிரிதலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹபரணையில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று எதிர்திசையில் வந்த வேன் வாகனமொன்றில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 41 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி மின்னேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வேன் வாகனத்தின சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மொரொன்துடுவ ஶ்ரீ ஜயவர்தனபுர பிரதான விதியின் தெல்துவ பிரதேசத்தில் களுத்துறையில் இருந்து பண்டாரகம நோக்கி பயணித்த பேருந்தொன்றில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் வாத்துவை பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.