நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிப் பாடசாலைகளையும் அபிவிருத்தி.பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு.

 நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிப் பாடசாலைகளையும் அபிவிருத்தி.பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு.


முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையொன்று வகுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

அதன் வரைபு ஏற்கனவே கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.

முன்பள்ளி கல்வி நடவடிக்கைகளை முறை சார்ந்ததாக மேற்கொள்ளும் தேசிய கொள்கையொன்று இதுவரையிலும் இருந்ததில்லை. எனவே முறை சார்ந்த கொள்கையானது நிபுணர் குழுவொன்றின் மூலம் வகுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்துப் பாலர் பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கப்படும். அதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி கிடைத்துள்ளது. முன்பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே வகுத்துள்ளது என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிப் பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்கள் பல ஏற்கனவே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்கும் குறைந்தது தரமான பாலர் பாடசாலையொன்றையாவது ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அவை சர்வதேச தரத்திற்கமைவாக நடத்தப்படும்.

மேலும், பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவொன்றை வழங்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த மேலும் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.