LRH வைத்தியசாலையில் 55 நாட்களேயான குழந்தை மரணம்.. ஜனாசாவை ஓட்டமாவடியில் அடக்க ஏற்பாடு..!

 LRH வைத்தியசாலையில் 55 நாட்களேயான குழந்தை மரணம்..

ஜனாசாவை ஓட்டமாவடியில் அடக்க ஏற்பாடு..!



பிறந்து 55 நாட்களேயேயான குழந்தையொன்று கொரொனா தொற்றினால் நேற்று (05) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது.

கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்த குறித்த குழந்தை, லேடி றிச்வே சிறுவர் வைத்தியசாலையில் (LRH) சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் பெற்றோர் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இதனால் அவர்களது உறவினர்கள் குழந்தையின் ஜனாஸாவினை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த குழந்தையின் ஜனாஸா, விரைவில் ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தகவலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான 

அலி சாஹிர் மௌலான இணைய செய்தி தளம் ஒன்றிற்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.