5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று பூர்த்தி.

5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று பூர்த்தி.

𝑰𝑻𝑴▪️ சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்தை இன்று பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

𝑰𝑻𝑴▪️98 வீதமானோருக்கு இதுவரை கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்கிறது. சில பயனாளர்கள் வீடுகளில் இல்லாதினால் இந்த கொடுப்பனவை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.. 

𝑰𝑻𝑴▪️இதேவேளை, தனிமைப்படுத்தல் காரணங்களுக்காக கொழும்பு மற்றும் குருநாகலில் இரண்டு பிரதேசங்களில் உள்ள இரண்டு சமுர்த்தி வங்கிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால், 37 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்க முடியவில்லை எனவும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.. இருந்த போதிலும், குறித்த பிரதேசங்களில் உள்ள ஒரு வங்கி இன்று திறக்கப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது..

𝑰𝑻𝑴▪️ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட செயலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கொழும்பு மாவட்டத்தில் 75 ஆயிரம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலாளர் பிரதீப் யஸரட்ன தெரிவித்தார். 

𝑰𝑻𝑴▪️கேகாலை மாவட்டத்தில் 72 ஆயிரம் குடும்பங்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ் வீரசூரிய கூறினார். நுவரெலியா மாவட்டத்தில் 52 ஆயிரம் குடும்பங்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் 62 ஆயிரம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் கூறினார். 

𝑰𝑻𝑴▪️இதேவேளை. குருநாகல் மாவட்டத்தில் ஒரு லட்சத்து, 65 ஆயிரம் குடும்பங்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் ஆர்.எம்.எஸ் ரட்னாயக்க தெரிவித்தார். 

𝑰𝑻𝑴▪️கண்டி மாவட்டத்தில் ஒரு லட்சத்து எண்ணாயிரம் பேருக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவ வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்தார். மாத்தளை மாவட்டத்தில் நேற்றுவரை 47 ஆயிரம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் கருணாசிறி பெரேரா தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.