முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ரமழான் வழிகாட்டல்கள் .

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ரமழான் வழிகாட்டல்கள் .

இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் அருள்பொருந்திய ரமழானை வாழ்த்துவதோடு, அனைத்து பள்ளிவாயல்களினதும் நம்பிக்கையாளர்களுக்கும்/பொறுப்பாளர்களுக்கும் பின்வருமாறு இலங்கை வக்ப் சபை பணிப்புரை விடுக்கின்றது.

 1. பள்ளிவாயலுக்கு அனுமதிக்கப்பட வேண்டிய நபர்களின் எண்ணிக்கை மற்றும் கஞ்சி விநியோகம் போன்ற பள்ளிவாயலில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏதேனும் பிற நடவடிக்கைகள் இருந்தால் அவை தொடர்பாகவும் தங்களது பிரதேச பொது சுகாதார அத்தியட்சகரின் (PHI) அல்லது சுகாதார மருத்துவ அதிகாரியின் (MOH) ஆலோசனையை பெறுதல்.

 2. எந்தவொரு பள்ளிவாயலிலும் மேற்கொள்ளப்படும் வணக்க வழிபாடுகள் அல்லது பிற நடவடிக்கைகளால் சகோதர மத சமூகங்களுக்கு எந்தவிதமான இடையூறும் அல்லது தொந்தரவும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தல்.

 3. கோவிட் 19 தொடர்பான மற்ற அனைத்து சுகாதார / பாதுகாப்பு மற்றும் வக்ப் சபையின் முன்னைய விதிமுறைகள் / வழிகாட்டுதல்கள் பள்ளிவாயல்களில் மிகவும் கண்டிப்பாக பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தல்.

 4. மேற்கூறியவற்றில் எவ்வித மீறல்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது பள்ளிவாயல்களினது நம்பிக்கையாளர்களின் பொறுப்பு என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.