நாடு முழுவதும் விசேட சோதனை - பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு.

நாடு முழுவதும் விசேட சோதனை - பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 𝐓𝐀𝐌𝐈𝐋 𝐌𝐄𝐃𝐈𝐀

𝑰𝑻𝑴▪️புத்தாண்டு நிறைவடையும் வரையில், வீதிகளில் பயணிக்கும் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

𝑰𝑻𝑴▪️காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴▪️சாரதிகள், கவனயீனமற்ற முறையிலும், அதிக வேகத்துடனும், மதுபோதையிலும் வாகனங்களை செலுத்துகின்றமை தொடர்பில் கண்காணிக்கப்படுகிறது.

𝑰𝑻𝑴▪️மதுபோதையில் அல்லது போதைப்பொருளை பயன்படுத்தியவாறு, வாகனத்தை செலுத்திய நிலையில் கைதுசெய்யப்படும் சாரதிக்கு, காவல்துறை பிணை வழங்கப்பட மாட்டாது.

𝑰𝑻𝑴▪️அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதுடன், குறித்த வாகனமும் காவல்துறையினால் பொறுப்பேற்கப்படும் என காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

𝑰𝑻𝑴▪️மதுபோதையில் இருந்த நபருக்கு, வாகனத்தை செலுத்த வழங்கியமை தொடர்பில், குறித்த வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என்றும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

𝑰𝑻𝑴▪️இதேவேளை, புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு முன்னுரிமையளித்து செயற்படுமாறு, பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.