வரலாற்றில் இன்று – 05.06.2021 ஜூன் 5 கிரிகோரியன் ஆண்டின் 156 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 157 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 209 நாட்கள் உள்ளன

 வரலாற்றில் இன்று – 05.06.2021


ஜூன் 5  கிரிகோரியன் ஆண்டின் 156 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 157 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 209 நாட்கள் உள்ளன


இன்றைய தின நிகழ்வுகள்.


👉70 – எருசலேம் முற்றுகை: டைட்டசும் அவனது உரோமைப் படையினரும் எருசலேமின் நடுச் சுவரைத் தகர்த்தனர்.

👉754 – பிரீசியாவில் ஆங்கிலோ-சாக்சன் மதப்பரப்புனர் பொனிபேசு பாகான்களால் கொல்லப்பட்டார்.

👉1829 – பிரித்தானியப் போர்க் கப்பல் பிக்கில் கியூபாக் கரையில் அடிமைகளை ஏற்றி வந்த வொலிதோரா என்ற கப்பலைக் கைப்பற்றியது.

👉1832 – லூயி பிலிப்பின் முடியாட்சியைக் கவிழ்க்க பாரிசு நகரில் கிளர்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

👉1849 – டென்மார்க் முடியாட்சி அரசியலை ஏற்றுக் கொண்டது.

👉1851 – ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்வின் அடிமை முறைக்கெதிரான அங்கிள் டாம்’ஸ் கேபின் என்ற 10-மாதத் தொடர் வெளிவர ஆரம்பித்தது.

👉1862 – தெற்கு வியட்நாமின் சில பகுதிகளை பிரான்சிற்கு அளிக்கும் உடன்பாடு சாய்கோன் நகரில் எட்டப்பட்டது.

👉1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவின் பியெட்மொண்ட் நகரில் இடம்பெற்ற போரில் அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளைத் தோற்கடித்து கிட்டத்தட்ட 1,000 பேரை சிறைப்பிடித்தனர்.

👉1868 – இலங்கையின் மேற்கு மாகாணத்தில் கொள்ளைக் காய்ச்சல் பரவியது.[1]

👉1873 – சான்சிபார் சுல்தான் பர்காசு பின் சயீது மிகப்பெரும் அடிமை வணிகச் சந்தையை பிரித்தானியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டின் மூலம் மூடினார்.[2]

👉1900 – இரண்டாம் பூவர் போர்: பிரித்தானியர் தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவைக் கைப்பற்றினர்.

👉1915 – டென்மார்க்கில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

👉1916 – முதலாம் உலகப் போர்: உதுமானியப் பேரரசுக்கு எதிராக அரபுக் கிளர்ச்சி ஆரம்பமானது.

👉1942 – இரண்டாம் உலகப் போர்: பல்கேரியா, அங்கேரி, உருமேனியா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா போரை அறிவித்தது.

👉1944 – இரண்டாம் உலகப் போர்: நார்மாண்டி படையிறக்கம் ஆரம்பம்: ஆயிரத்திற்கும் அதிகமான பிரித்தானியக் குண்டுவீச்சு விமானங்கள் செருமனியின் அத்திலாந்திக் சுவர் மீது 5,000 தொன் குண்டுகளை வீசின.

👉1945 – செருமனி கூட்டுப் படைகளின் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

👉1946 – சிக்காகோவில் உணவுசாலை ஒன்று தீப்பிடித்ததில் 61 பேர் உயிரிழந்தனர்.

👉1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

👉1958 – தமிழருக்கு எதிரான வன்முறைகள் 1958: இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 10 உறுப்பினர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.[3]

👉1959 – லீ குவான் யூ தலைமையில் சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.

👉1963 – அயொத்தொல்லா ரூகொல்லா கொமெய்னியை ஈரான் அரசுத்தலைவர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி கைது செய்ததை அடுத்து ஈரானில் கலவரம் வெடித்தது.

👉1967 – ஆறு நாள் போர் ஆரம்பம்: இசுரேலிய வான்படையினர் எகிப்தின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.

👉1968 – ஐக்கிய அமெரிக்காவின் அரசுத் தலைவருக்கான வேட்பாளர் இராபர்ட் எஃப் கென்னடி பாலத்தீனர் ஒருவனால் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சுடப்பட்டார். இவர் அடுத்த நாள் உயிரிழந்தார்.

👉1969 – அனைத்துலக கம்யூனிஸ்டுகளின் மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.

👉1974 – ஈழப்போர்: சிவகுமாரன் உரும்பிராயில் காவற்துறையினர் சுற்றி வளைத்த போது சயனைட் அருந்தி மரணமடைந்தார். இவரே ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர்.

👉1979 – இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி அரசுடைமை ஆக்கப்பட்டது.

👉1981 – லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஐந்து பேர் மிக அரிதான நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டமை அறிவிக்கப்பட்டது. இதுவே எயிட்சுக்கான முதலாவது அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வு ஆகும்.

👉1983 – உருசியாவின் அலெக்சாந்தர் சுவோரவ் என்ற பயணிகள் கப்பல் உலியானவ்சுக் நகரத் தொடருந்துப் பாலம் ஒன்றில் மோதியதில் நூற்றிற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.[4]

👉1984 – புளூஸ்டார் நடவடிக்கை: இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் படி, சீக்கியர்களின் பொற்கோயில் மீது இராணுவத்தினர் தாக்குதலை ஆரம்பித்தனர்.

👉1995 – போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள் முதன் முதலாக உருவாக்கப்பட்டது.

👉1997 – காங்கோ குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

👉2000 – காங்கோவில் உகாண்டா, ருவாண்டா படையினரிடையே ஆறு-நாள் போர் ஆரம்பமானது. கிசாங்கனி நகரின் பெரும் பகுதி அழிந்தது.

👉2003 – பாக்கித்தான், இந்தியா ஆகிய நாடுகளில் பெரும் வெப்பக்காற்று வீசியதில், வெப்பநிலை 50 °C ஐ எட்டியது.

👉2004 – பிரான்சில் முதன் முதலாக ஒருபால் திருமணம் இரு ஆண்களுக்கிடையே இடம்பெற்றது.

👉2006 – செர்பியா செர்பியா-மொண்டெனேகுரோவிடம் இருந்து விடுதலை பெற்றது.

👉2009 – பெருவில் 65 நாட்கள் கலவரங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கும் பழங்குடியினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.

👉2013 – அமெரிக்கா, பிலடெல்பியாவில் கட்டடம் ஒன்று உடைந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்.

👉2015 – மலேசியாவின் சபா மாநிலத்தில் 6.0 அளவு நிலநடுக்கத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

👉2017 – மொண்டெனேகுரோ நேட்டோ அமைப்பில் 29-வது உறுப்பினராக இணைந்து கொண்டது.

👉2017 – பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதாகக் குற்றம் சாட்டி ஆறு அரபு நாடுகள்—பகுரைன், எகிப்து, லிபியா, சவூதி அரேபியா, யெமன், ஐக்கிய அரபு அமீரகம்—கத்தார் உடனான உறவைத் துண்டித்தன.


இன்றைய தின பிறப்புகள்.


👉1646 – எலினா கார்னரோ பிசுகோபியா, இத்தாலியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1684)

👉1723 – ஆடம் சிமித், இசுக்கொட்டியப் பொருளியலாளர், மெய்யியலாளர் (இ. 1790)

👉1771 – ஆணோவரின் முதலாம் எர்ணசுட்டு அகசுத்து (இ. 1851)

👉1819 – ஜான் கவுச் ஆடம்சு, ஆங்கிலேயக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1892)

👉1862 – ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட், நோபல் பரிசு பெற்ற சுவீடன் கண் மருத்துவர் (இ. 1930)

👉1882 – சைமன் கிரகரி பெரேரா, இலங்கை இயேசு சபை கத்தோலிக்க மதகுரு, வரலாற்றாளர் (இ. 1950)

👉1883 – ஜான் மேனார்ட் கெயின்ஸ், ஆங்கிலேயப் பொருளியலாளர், மெய்யியலாளர் (இ. 1946)

👉1887 – ஜார்ஜ் ஜோசப், கேரள இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1938)

👉1896 – முகம்மது இசுமாயில், இந்திய முஸ்லிம் அரசியல் தலைவர் (இ. 1972)

👉1898 – பெடரிக்கோ கார்சியா லோர்க்கா, எசுப்பானியக் கவிஞர், திரைப்பட இயக்குநர் (இ. 1936)

👉1900 – டென்னிஸ் கபார், நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-ஆங்கிலேய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1979)

👉1914 – தஞ்சை இராமையாதாஸ், தமிழகக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1965)

👉1925 – வ. அ. இராசரத்தினம், ஈழத்து எழுத்தாளர் (இ. 2001)

👉1929 – வ. ந. நவரத்தினம், இலங்கை அரசியல்வாதி (இ. 1991)

👉1936 – பூ. ம. செல்லத்துரை, இலங்கை எழுத்தாளர், பத்திரிகையாளர் (இ. 2016)

👉1944 – விட்பீல்டு டிஃபீ, அமெரிக்கக் கணுக்கவியலாளர்

👉1961 – ரமேஷ் கிருஷ்ணன், இந்திய டென்னிசு வீரர்

👉1965 – மயில்சாமி, தென்னிந்திய நடிகர், நகைச்சுவையாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்

👉1972 – யோகி ஆதித்தியநாத், இந்திய மதகுரு, அரசியல்வாதி

👉1974 – ரம்பா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை


இன்றைய தின இறப்புகள்.


👉1900 – ஸ்டீபன் கிரேன், அமெரிக்கக் கவிஞர், புதின எழுத்தாளர் (பி. 1871)

👉1910 – ஓ ஹென்றி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1862)

👉1958 – ரெங்கநாதன் சீனிவாசன், மொரிசியசு அரசியல்வாதி (பி. 1910)

👉1973 – மாதவ சதாசிவ கோல்வால்கர், இந்திய இந்துத்துவவாதி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தலைவர் (பி. 1906)

👉1974 – சிவகுமாரன், சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது ஈழப் போராளி (பி. 1950)

👉1994 – கிருஷ்ண சைதன்யா, மலையாள இலக்கியவாதி, மதிப்புரைஞர் (பி. 1918)

👉1999 – அப்துல் அசீஸ், இலங்கை அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1921)

👉2002 – மு. சிவசிதம்பரம், இலங்கை அரசியல்வாதி

👉2004 – ரானல்ட் ரேகன், அமெரிக்காவின் 40வது அரசுத்தலைவர், நடிகர் (பி. 1911)

👉2004 – கே. கணேஷ், இலங்கை மலையக எழுத்தாளர் (பி. 1920)

👉2012 – ரே பிராட்பரி, அமெரிக்க அறிபுனை எழுத்தாளர் (பி. 1920)


இன்றைய தின சிறப்புகள்.


👉மர நாள், (நியூசிலாந்து)

👉தந்தையர் தினம் (தென்மார்க்கு)

👉இந்தியர் குடியேறிய நாள் (சுரிநாம்)

👉விடுதலை நாள் (சீசெல்சு)

👉ஆசிரியர் நாள் (உருமேனியா)

👉உலக சுற்றுச்சூழல் நாள்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.