தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான கல்வியமைச்சின் அறிவித்தல்..!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான கல்வியமைச்சின் அறிவித்தல்..!


தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சு அறிவித்தலொன்று வெளியிட்டுள்ளது. கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்றால் தங்களது நிரந்தர பணியிடத்திலிருந்து, தற்காலிகமாக வேறொரு பாடசாலைக்கு இணைக்கப்பட்டு, குறித்த காலப்பகுதியை நிறைவுசெய்த அனைத்து தேசிய பாடசாலை ஆசிரியர்களும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தமது நிரந்தர பணியிடத்தில் கடமையாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், மீண்டும் இணைப்புக் காலத்தை நீடிக்க விரும்பினால், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தமது நிரந்தர பணியிடத்திலிருந்து அதிபரின் பரிந்துரையுடன் மீள விண்ணப்பத்தை முன்வைக்க முடியும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.