இன்று முதல் கத்தார் பொது இடங்களில் முகக் கவசம் தேவையில்லை!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இன்று முதல் கத்தார் பொது இடங்களில் முகக் கவசம் தேவையில்லை!

கத்தாரின் திறந்தவெளி மற்றும் பொது இடங்களில் இன்று முதல் முகக் கவசம் கட்டாயமில்லை என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் கத்தாரின் படிப்படியான திட்டத்தின் அடிப்படையில் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ் வரும் முடிவும் எடுக்கப்பட்டுள்ளன.

 1. திறந்தவெளி மற்றும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை. என்றாலும் ஏற்பாடு செய்யப்பட்ட பொது நிகழ்வுகள், சந்தைகள், கண்காட்சிகள் போன்றவற்றில் முகக் கவசம் அணியும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது . 

மேலும், மசூதிகள், பாடசாலைகைள், வைசத்தியசாலைகள் மற்றும் பல்கலைக்கழக வளகம் போன்ற இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2. சந்தைகள், பல்பொருள் அங்காடிகள் போன்றவை முழுமையாக திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சிறுவர்கள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. சந்தைகளில் உணவுப் பொருட்கள் விற்கப்படும் பகுதிகளுக்கான அனுமதி 50 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் அங்காடிகளில் உள்ள தொழுகையறைகள், உடைகளை சரிபார்க்கும் அறைகள் போன்றவைகளும் திறக்கப்பட்டுள்ளன.

 3. அருங்காட்சியகங்கள் மற்றும் பொது நூலகங்கள் போன்றவை முழுமையாக திறக்கப்பட்டுள்ளன.

 4. அரச மற்றும் தனியார் ஊழியர்கள் முழுமையாகப் பணிக்கு திரும்புவார்கள். அவர்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அன்டீஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். 

5. “Qatar Clean”யின் கீழ் இயங்கும் வெளிப்புற உணவகங்கள், மற்றும் கேபேக்கள் முழுமையாகவும், “Qatar Clean”யின் இயங்காதவைகள் 50 வீதம் என்ற அடிப்படையில் திறக்கப்படும். 

6. “Qatar Clean”யின் அடிப்படையில் இயங்கும், உள்புற உணவகங்கள் மற்றும் கேபேக்கள் 75 சதவீத விழுக்காடு என்ற வகையிலும், “Qatar Clean”யின்யில் இயங்காதவைகள் 40 வீதம் என்ற அடிப்படையிலும் திறக்கப்படும்.

 7. அனைத்து உணவக மற்றும் கேபே ஊழியர்கள் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாமென்பதோடு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தங்களது குடும்பத்துடன் அனுமதிக்கப்படுவார்கள். 

8. பாடசாலை மாணவர்கள் இன்று முதல் முழுமையாக பாடசாலைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள் கத்தாரில் கொரோனா நோயார்கள் தொகை சடுதியாக குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.