நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் ஷர்துல் தாக்குர் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தினார். 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

 டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. கெய்க்வாட் 32 ரன்கள், உத்தப்பா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

 பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட டூ பிளெசிஸ் 86 ரன்கள் குவித்து கடைசி பந்தில் அவுட் ஆனார். மொயீன் அலி 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர். வெங்கடேஷ் அய்யர் 50 ரன் எடுத்து அவுட்டானார். நிதிஷ் ரானா டக் அவுட்டானார். சுனில் நரேன் 2 ரன்னில் வெளியேறினார். 

ஷுப்மான் கில் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 இதன்மூலம் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. 

சென்னை அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட், ஹேசில்வுட், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.