இலங்கையில் திருமணமான பெண்களுக்கு எச்சரிக்கை.

𝑰𝑻𝑴 ✍️ டுபாயில் பணிபுரிந்து வந்த திருமணமான பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தி 5 லட்சம் ரூபாவை கப்பம் கோரிய நபரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இது தொடர்பான விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ கரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய, இந்த கைது நடவடிக்கைக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ குறித்த பெண் டுபாயில் பணியாற்றும் போது அவருடன் ஏற்பட்ட பழக்கத்திற்கமைய, அவரிடம் அவர் தனிப்பட்ட புகைப்படங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ இருவரும் இவ்வருடம் இலங்கைக்கு வந்துள்ளதுடன், குறித்த பெண் தனது திருமணமான கணவருடன் வாழ்ந்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

𝑰𝑻𝑴 ✍️ திருமணமான பெண்ணுடன் இணைந்து வாழ்ந்தமைக்காக அவரை பழிவாங்கும் நோக்கில் அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த நபர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி 5 லட்சம் ரூபாய் கோரியுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் அந்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

𝑰𝑻𝑴 ✍️ இது போன்ற பல பெண்களுக்கு இடம்பெற்று வரும் நிலையில் அது குறித்து பெண்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ திருமணமான பெண்கள் பிற ஆண்களுடன் நட்பு ஏற்படுத்தும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுவதுடன், தமது அந்தரங்க விடயங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.