இலங்கை சமூக வலைத்தள பயனாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை.

𝑰𝑻𝑴 ✍️ பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்கள் மற்றும் பல்வேறு இணைய முகவரிகளை பயன்படுத்தி 'இலவச பரிசுகளை வழங்குவதாக கூறி சமூக ஊடகங்கள் ஊடாக செய்திகளை பரிமாறிக்கொள்வது அதிகரித்து வருவதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இது தொடர்பாக 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இந்த போலிச் செய்திகள் மூலம் இணையத் தாக்குதல் செய்பவர்கள் எந்த நேரத்திலும் உங்களது முக்கியமான தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இணையத் தாக்குதல் செய்பவர்கள் இதன் மூலம் உங்களின் சமூக ஊடக கணக்குகளை அபகரிக்க முடியும் என தகவல் தொழில்நுட்ப பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ அதன்படி, இதுபோன்ற செய்திகள் மற்றும் இணைப்புகளை கிளிக் செய்வதைத் தவிர்க்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.