கொழும்பு வரும் வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு.

 

𝑰𝑻𝑴 ✍️ தாமரைக் கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக வாகனங்களில் வருவோர் தமது வாகனங்களை நிறுத்த வேண்டிய இடங்கள் குறித்து பொலிஸார் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், இம்மாதம் 19ம் திகதி முதல் எதிர்வரும் 28ம் திகதி வரை தாமரைக் கோபுரத்தை அண்மித்த பகுதிகளில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

𝑰𝑻𝑴 ✍️ அதனை கண்டுகளிப்பதற்கு வருவோரின் வசதி கருதி வாகனங்களை கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டள்ளன.

𝑰𝑻𝑴 ✍️ லேக் ஹவுஸுக்கு எதிரே உள்ள வாகன தரிப்பிடம் (கட்டணம் செலுத்த வேண்டும்), கப்டன் கார்டன் ஆலய கார் தரிப்பிடம், டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை மற்றும் காமினி சுற்றுவட்டம் முதல் ரீகல் வரையுள்ள வீதியின் இரண்டு புறங்களையும் வாகன தரிப்பிடங்ளாக பயன்படுத்த முடியும்.

𝑰𝑻𝑴 ✍️ மேலும் ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடலை அண்மித்த பிரதேசங்களில் டிசம்பர் 19ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க வரும் வாகனங்களை பின்வரும் இடங்களில் நிறுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ MOD கார் தரிப்பிடம், காலி முகத்திடல் வீதி ஓரத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் பகுதி மற்றும் புதிய பாலதக்ஷ (சாரணர்) மாவத்தையில் உள்ள வாகன தரிப்பிடம் இடம் என்பன ஆகும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.