ஒரு நாளைக்கு ஒருவர் எட்டு கப் தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது உண்மையா?

சமூக ஊடகங்கள் அதிகரித்துப்போன இந்த காலகட்டத்தில், ஒருவர் ஒரு நாளைக்கு எட்டு கப் தண்ணீர் குடித்தாகவேண்டும் என்று கூறும் செய்திகளை பரவலாகக் காணலாம்.

அதே சமூக ஊடகங்களில், புரூஸ் லீ அதிக தண்ணீர் குடித்ததால் இறந்துபோனார் என்றும் ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது.

ஒரு நாளைக்கு ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும்?

கொஞ்சம் தண்ணீர் குடித்தாலும் பிரச்சினை, அதிகம் தண்ணீர் குடித்தலும் பிரச்சினை. ஆக, ஒருவருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் தேவை?

சமீபத்தில் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. சொல்லப்போனால், ஒருவர் ஒரு நாளைக்கு எட்டு கப் தண்ணீர் குடித்தாகவேண்டும் என்ற செய்தி அனைவருக்கும் பொருந்தாது என்கிறது அந்த ஆய்வு முடிவுகள்.  

தண்ணீர் தேவை என்பது பல்வேறு காரணிகளைப் பொருத்தது

ஆய்வாளர்கள், 26 நாடுகளைச் சேர்ந்த 5,600 பேரிடம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள், ஒருவருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பது, அவரது வயது, உடல் பருமன், அவரது உடல் உழைப்பு, அவர் விளையாட்டு வீரரா, கர்ப்பிணியா என்பது போன்ற பல்வேறு விடயங்களைப் பொருத்ததாகும் என தெரிவிக்கின்றன.

உதாரணமாக, விளையாட்டு வீரர்கள் அல்லது உடல் உழைப்பைப் பயன்படுத்தி கடினமாக உழைப்பவர்கள் ஆகியோருக்கு அதிக அளவில் வியர்ப்பதால், அவர்கள் உடலில் இருந்து அதிக அளவிலான திரவங்கள் வெளியேறுகின்றன. ஆகவே, விளையாட்டு வீரர்களுக்கு, மற்றவர்களைவிட சுமார் ஒரு லிற்றர் தண்ணீராவது அதிகம் தேவை என்கிறது அந்த ஆய்வு.

அதுபோல, ஆண்களுக்கும் பெண்களுக்கும் கூட தண்ணீர் தேவையில் வித்தியாசம் உள்ளதும் தெரியவந்துள்ளது. ஒரு 20 வயது ஆண் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 3.2 லிற்றர் தண்ணீர் குடிக்கிறார். அதே நேரத்தில், அதே வயதுள்ள, அதே சூழலில் வாழும் பெண்ணோ, 2.7 லிற்றர் தண்ணீர்தான் குடிக்கிறார் என்கிறது அந்த ஆய்வு.

இதுபோக, நாம் வாழும் இடம் எவ்வளவு உயரத்தில் உள்ளது, அங்கு வெப்பநிலை எப்படி இருக்கிறது, காற்றில் ஈரப்பதம் எவ்வளவு உள்ளது என்பது போன்ற விடயங்களும் ஒருவருக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை நிர்ணயிக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.