ஏலக்காயால் தொப்பையை குறைக்க முடியுமா!?

உணவில் நறுமணத்தைக் கூட்ட உதவும் ஏலக்காயால் தொப்பையை குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

❇️ வயிற்று கொழுப்பைக் கரைக்கும் ஏலக்காய்

மணத்திற்கு மட்டுமல்ல உடல் எடை குறைப்புக்கும் ஏலக்காய் என்பது பாரம்பரியமான ஒன்று. உடல் பருமன் என்பது பல நோய்கள் ஏற்பட அடிப்படையான விடயமாக இருக்கிறது.

மாறிப் போன வாழ்க்கை முறை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் என உடல் எடை அதிகரிக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஏலக்காயை பயன்படுத்தி விரைவில் எடையை குறைக்கலாம்.

❇️ ஏலக்காயின் பயன்கள்

உடலில் படியும் கொழுப்பை குறைக்கும் குணம் கொண்ட ஏலக்காயை தினசரி உணவில் சேர்த்து வந்தால் வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை இயற்கையாகவே கரைக்கலாம்.

பொதுவாக உணவிலும் இனிப்புப் பதார்த்தங்களிலும் சேர்க்கப்படும் ஏலக்காய் தேநீரிலும் பயன்படுத்தப்படும்.

❇️ உடல் எடை குறைக்க உதவும்

ஏலக்காயில் கொழுப்பை எரிக்கும் குணம் உள்ளது இதனை தினசரி உணவில் சேர்த்து வந்தால் வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை இயற்கையாகவே கரைக்கலாம்.

❇️ கொலஸ்ட்ரால் குறையும்

ஏலக்காய் சாப்பிடுவது செரிமான சக்தியை அதிகரிக்கிறது.

அதனால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் எரியும் வாயு போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.

செரிமான சக்தி அதிகரிப்பதால் படிப்படியாக எடை குறையும்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு சிறிய ஏலக்காயை சமைக்காமல் அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ராலை சட்டென்று குறைந்துவிடும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.