நெற்றி பகுதியில் முடி உதிர்வா... இதை மட்டும் செய்யுங்கள் உடனடி பலன்

நெற்றி பகுதியில் முடி உதிர்வு

பொதுவாக வயதாக வயதாக மேல் நெற்றி பகுதியில் முடி உதிர்வடைந்து கொண்டே போகும் அதனால் அவர்களது முக தோற்றமே வேறுபடும்.

பெண்களுக்கு தலையில் சொட்டையோ அல்லது வழுக்கையோ விழுகாது என்றாலும் பல பெண்களுக்கு முன் நெற்றியில் முடி உதிர்வடைந்து கொண்டு போகும்.

அது அவர்களுது முக அழகையே பாதிக்கும். இதனை எளியமுறையில் வளர செய்ய முடியும்.

தற்போது அவற்றை பார்ப்போம். 

வெங்காயத்தை அரைத்து அவற்றில் சாறு எடுத்து முடி உதிர்ந்த இடத்தில் தடவும்போது, இது மீண்டும் நெற்றியில் முடி வளர வேர்களை உருவாக்கி தருகின்றது.

எனவே வெங்காயத்தின் சாறை முடி உதிர்ந்த இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்

இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர முன் நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.

மிளகு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

இதனால் முடியின் வேர்க்கால்கள் உறுதியாகி நெற்றியில் முடி வளர உதவுகிறது.

மிளகை அரைத்து அவற்றில் சிலதுளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நெற்றியில் முடி உதிர்ந்த இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.

இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர, நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.

முன் நெற்றியில் முடி வளர கொத்தமல்லியை அரைத்து தலையில் பூசி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். 

இவ்வாறு இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர நெற்றியில் முடிவளர ஆரம்பிக்கும்.

சிறிதளவு பீட்ருட் இலைகளை எடுத்துக்கொண்டு, அவற்றை தண்ணீரில் வேகவைத்து, நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்பு அரைத்த சாறுடன் சிறுதளவு மருதாணி பொடி கலந்து, தலையில் பூசவும்.பின்பு 20 நிமிடங்கள் கழித்து தலையை கழுவ வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வர நெற்றியில் முடிய வளர ஆரம்பிக்கும்.

நெற்றியில் முடி வளர எண்ணையுடன் சிறிதளவு லவங்க பட்டை பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முடி உதிர்ந்த இடத்தில் இந்த கலவையை தடவ வேண்டும்.

இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வர நெற்றியில் முடி வளர ஆரம்பிக்கும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.