நம்பிக்கை துரோகம்.

நம்பிக்கை துரோகம்..! மிகப் பொல்லாத, உடன் கொல்லும் ஒருவகை புற்றுநோய் போன்றது...! 

அதிலும் எப்போதும் இந்தத் துரோகமானது நம்பிக்கையைக் கொல்வதாகவே அமைந்து விடுகிறது...

ஒருவரின் துரோகம் இன்னொருவரை நிலைகுலையச் செய்யும். ஏனெனில், துரோகம் என்பதே நம்பிக்கையின் எதிர்ப்பதந்தான்...

எங்கு நம்பிக்கை அதிகம் வைக்கப்படுகிறதோ, அங்கே துரோகத்தின் வீச்சு அதிகமாய் உணரப்படும். நம்பிக்கை துரோகத்தைப் போல் மோசமானது ஒன்றும் கிடையாது...

எனவே தான், துரோகம் இழைப்பவர்கள் என பெரும்பாலும் நண்பர்களையும், வாழ்க்கைத் துணையையும், நெருங்கிய உறவுகளையும் சுட்டிக் காட்டுகிறோம்...

ஏனெனில், அவர்களிடம் நாம் நம்பிக்கை அதிகம் வைக்கிறோம்...

ஆம் நண்பர்களே...!

நீங்கள் உயிருக்கு உயிராக நம்பியவர்கள் உங்களுக்குத் துரோகம்  இழைத்ததற்கு வருத்தம் அடையாதீர்கள்...!

நீங்கள் மற்றவர்கள் மீது வைத்த மிகையான நம்பிக்கை தான் அவர்களின் துரோகத்தை அடையாளம் காண்பித்தது, ஆம்!, வாழ்க்கையில் நமக்கு அதிகம் பாடம் கிடைத்தது சிலரின் துரோகத்தால் தான்...!!

  பிறர் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தாலும் நீங்கள் பிறருக்கு நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள், நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றுவது சாமர்த்தியம் அல்ல.. துரோகம்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.