குழந்தைகளின் பிடிவாத குணத்தை மாற்றும் வழிகள்!

குழந்தை வளர்ப்பு ஒரு கலை. இந்த அவசர உலகில் பெற்றோர்களுக்கும் நேரமின்மை, பொறுமையின்மையால் குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பொருளாதாரத்தை உயர்த்த இருவருமே பணிக்குச் செல்ல வேண்டியிருப்பதால் குழந்தைகளுக்கான அன்பு, பாசம் சரிவர கிடைப்பதில்லை. இதைக் காரணமாக வைத்துக்கொண்டு பிள்ளைகளும் ஆசைப்படும் பொருளைக் கேட்ட உடனே கிடைக்க வேண்டுமென நினைக்கின்றனர்.

வளரும் பருவத்தில் அவர்களது பிடிவாத குணம் அதிகரித்து, பெற்றோரை மிரட்டுவது, எமோஷனலாக பேசி பணிய வைப்பது என பழகுகின்றனர். இதையெல்லாம் பெற்றோர் சிறுவயதிலேயே கண்டித்து அவர்களது தவறை புரிய வைக்க வேண்டும்.

‘பெற்றோரின் நிதி நிலைமை நன்றாக இருக்கிறது. கொடுத்தால் என்ன?’ என நினைக்கும் பிள்ளைகளிடம், வீட்டின் வரவு செலவு பற்றி சொல்ல வேண்டும். ஆடம்பர செலவை அனைவரும் குறைத்தால்தான் அவசியமான பொருளையோ, சொத்துகளையோ வாங்க முடியும் என புரிய வைக்க வேண்டும்.

சாப்பிட, பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைகளிடம் காரணம் என்ன என்று கேட்டு தெளிவுபடுத்த வேண்டும். அன்பால் திருத்த முடியாதபோது பிள்ளைகளுக்கு பிடித்தவர்களையோ அல்லது மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல தகுந்த ஆலோசனை, தீர்வு கிடைக்கும்.

அடிப்பது, மிரட்டுவது, எமோஷனலாக பெற்றோர் பேசுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். நல்ல நண்பர்கள், மகிழ்ச்சியான குடும்பம், தன்னம்பிக்கை வார்த்தைகளே அவர்களை நல்வழிப்படுத்தும்.

இணையவழி பயன்பாடு ஒலி, ஒளி ஊடகங்களில் நல்லதைப் பார்க்கப் பழக்குங்கள். தங்களைப் பற்றிய சுய மதிப்பீடு, தான் செய்வது சரியா என்பனவற்றை அவர்களையே எண்ணிப் பார்க்கச் சொல்லுங்கள். 

பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பெற்றோரும், சுற்றமும் வாழ்ந்துகாட்ட, பிள்ளைகள் தன்னாலேயே நல்ல குணநலன்களைக் கொண்டு வளர்வார்கள். ஈகோ பார்க்காமல் பிள்ளைகள் சொல்வதையும் கேளுங்கள்.

நாமும் பல விஷயங்களில் பிடிவாதமாக இல்லாமல் இருத்தலே பிள்ளைகளை வழிநடத்த சிறந்த வழி.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.