வரலாற்றில் இன்று – 08.02.2024

பெப்ரவரி 8 கிரிகோரியன் ஆண்டின் 39 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 326 (நெட்டாண்டுகளில் 327) நாட்கள் உள்ளன.

✅ இன்றைய தின நிகழ்வுகள்

1587 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தை கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டாள்.

1622 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னன் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தான்.

1761 – லண்டனில் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1849 – புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது.

1900 – போவர் போர்: தென்னாபிரிக்காவில் லேடிஸ்மித் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் போவர்களினால் தோற்கடிக்கப்பட்டனர்.

1904 – சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்கியது.

1924 – ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1942 – ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி ஜெர்மனியை விட்டுத் தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.

1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

1963 – கியூபாவுடனான போக்குவரத்து, பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் ஐக்கிய அமெரிக்க மக்களுக்கு தடை செய்யப்பட்டதாக அதிபர் ஜோன் எஃப். கென்னடி அறிவித்தார்.

1971 – நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.

1974 – 84 நாட்கள் விண்ணில் சஞ்சரித்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.

1974 – அப்பர் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1989 – போர்த்துக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதியதில் 144 பேர் கொல்லப்பட்டனர்.

2005 – இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன.

✅ இன்றைய தின பிறப்புகள்

1641 – ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய கப்பல் மீகாமன் (இ. 1720)

1834 – திமீத்ரி மெண்டெலீவ், இரசிய வேதியியலாளர் (இ. 1907)

1897 – ஜாகீர் உசேன், இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் (இ. 1969)

✅ இன்றைய தின இறப்புகள்

1804 – ஜோசப் பிரீஸ்ட்லி, ஆங்கிலேய வேதியியல் அறிஞர் (பி. 1733)

1889 – சொலமன் ஜோன்பிள்ளை, எழுத்தாளர், சிலோன் பேட்ரியட் பத்திரிகையின் ஆசிரியர்

1975 – ரொபர்ட் ரொபின்சன், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய வேதியியலாளர் (பி. 1886)

1993 – நா. சண்முகதாசன், ஈழத்தமிழ்த் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (பி. 1920)

2005 – அரியநாயகம் சந்திரநேரு, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மனித உரிமை ஆர்வலர்.

✅ இன்றைய தின சிறப்பு நாள்

பரிநிர்வாண நாள் – பௌத்த வழிபாட்டு நாள்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.